'சிங்கப்பெண்ணே'... கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரகுமான் கச்சேரி!

ar-rahmans-30minute-performance-to-support-kamala-harris-campaign
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-10-14 16:25:00

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சியில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளும் ஏஏபிஐ என்ற அமைப்பின் ஏற்பாட்டில் ஏ.ஆர்.ரகுமான் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்டுடியோவில் பாடல் பதிவு செய்யப்பட்டு, இந்திய நேரப்படி திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.

அதில், அவரின் இசையில் “ஸ்லம்டாக் மில்லியனர்” படத்தில் இடம் பிடித்த “ஜெய் ஹோ” பாடலையும் ரகுமானின் குழுவினர் பாடி அசத்தினர்.

தொடர்ந்து தனது குழுவுடன் பாடிய ஏ.ஆர்.ரகுமான், “பிகில்” படத்தில் இடம்பிடித்த “சிங்கப்பெண்ணே” பாடலையும் பாடினார். ஏ.ஆர்.ரகுமானுடன் பாடகி சின்மயி, டிரம்ஸ் சிவமணி உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

பின்னர் பேசிய ஏ.ஆர். ரகுமான், உலக ஒற்றுமைக்காக கமலா ஹாரிஸின் முயற்சிகளை வரவேற்பதாகக் கூறினார்.

Ads
Recent International News
Trending News
Recent News
Prev
Next