IND vs BAN | இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் தொடர்... ரூ.200க்கு கவுன்டரில் டிக்கெட் விற்பனை!

cricket-ind-vs-ban-tickets-to-be-sold-everyday-in-counters
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-18 18:37:00

சென்னையில் நாளை (செப்டம்பர் 19) தொடங்கும் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகளை, சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கவுன்ட்டர்களில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் தொடரிலும் பங்கேற்கிறது.

முதலாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. வரும் 23-ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட்டுகள், 5 நாட்களுக்கும் சேர்த்து, குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாக ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், ஒவ்வொரு நாளும் போட்டியை பார்ப்பதற்கான டிக்கெட்டுகளை, மைதானத்தில் உள்ள கவுன்ட்டர்களிலேயே நாள்தோறும் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு நாள் மட்டும் போட்டியைக் காண குறைந்தபட்சம் ரூ.200-ஆக டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 400 ரூபாய், ஆயிரம் ரூபாய் என மேலும் இரண்டு பிரிவுகளிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த டிக்கெட்டுகளை நாள்தோறும் காலை 7 மணி அளவில் மைதானத்தில் உள்ள கவுன்ட்டர்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next