IND vs BAN | இந்தியா Vs வங்கதேசம்... வெற்றி யாருக்கு? - இரு அணிகளின் பலம், பலவீனம் என்னென்ன?

cricket-virat-kohli-vs-spinners-rohit-sharma-vs-xxx-key-battles-that-could-decide-india-vs-bangladesh-test-series
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-18 20:10:00

இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியின் முக்கியத்துவம் மற்றும் இரு அணிகளின் பலம், பலவீனம், உள்ளிட்டவற்றை விரிவாக விவரிக்கப் பார்க்கலாம்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு டெஸ்ட் போட்டி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதல் 23 ம் தேதி வரை களைகட்டவுள்ளது.

சேப்பாக்கத்தில் கடைசியாக 2021ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதனை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது டெஸ்ட் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டிக்காக டிக்கெட் விலை 200 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாள் டிக்கெட் 200,400,1000 ரூபாயாகவும், ஐந்து நாள் டிக்கெட் 1000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாள் டிக்கெட் கவுண்டரிலும், சீசன் டிக்கெட் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்படுகிறது.

கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொருப்பேற்ற பிறகு நடைபெறக்கூடிய முதல் டெஸ்ட் போட்டி என்பதால் வெற்றியோடு கணக்கை தொடங்க இந்திய அணி காத்திருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பந்தயத்தில் இந்திய அணி முதல் இடத்தில் நீடிக்கிறது அந்த இடத்தை தக்கவைக்க இந்த தொடர் முக்கியமானதாக அமைந்துள்ளது.

மேலும் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மைதானத்தில் வாஷ் அவுட் செய்து இந்தியா வந்துள்ள வங்கதேச அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 4வது இடத்திலிருந்து முன்னேறுவதற்காக போராடவுள்ளனர்.

உலகக் கோப்பைக்கு பிறகு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடாத விராட் கோலி 9 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளார். அத்துடன் கார் விபத்தில் சிக்கி அணிக்கு திரும்பியுள்ள ரிஷப் பண்ட் நீண்ட இடைவெளிக்கு பிறகு டெஸ்ட் அணியில் களமிறங்கவுள்ளார். அத்துடன் ரோஹித், கே.எல்.ராகுல், பும்ரா, ஜடேஜா, அஸ்வின் என நட்சத்திர பட்டாளங்கள் களமிறங்குவதால் ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சொர்க்க பூமி என்பதால் தமிழ்நாடு வீரர் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் ஆகியோர் விக்கெட் வேட்டை நடத்த காத்திருக்கின்றனர்.

வங்கதேசம் அணியை பொருத்தவரை இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாததால் இம்முறை எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. நஜ்முல் தலைமையிலான வங்கதேசத்தில் சஹிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், முஸ்தபிஷூர் ரஹிம் உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங்கில் அசத்த காத்திருக்கின்றனர். இதே போல் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான்களான Mehidy Hasan, Taijul Islam, ஆகியோர் அசத்த காத்திருக்கின்றர்.

டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் 13 போட்டிகளில் விளையாடியுள்ளது இதில் இந்தியா 11 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. இரண்டு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next