IND vs BAN | இந்திய அணியில் மூத்த வீரர்களுடனான உறவு எப்படி உள்ளது? - மனம் திறந்த கவுதம் கம்பீர்!

cricket-ind-vs-ban-gautam-gambhir-opens-up-about-his-relationship-with-senior-players
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-18 20:12:00

சென்னை சேப்பாக்கத்தில் வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி மோத உள்ள நிலையில், மூத்த வீரர்களுடனான உங்களின் உறவு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் தொடரிலும் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்த நிலையில், டெஸ்ட் போட்டியை முன்னிட்டு, கவுதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது மூத்த வீரர்களுடனான உறவு பயிற்சியாளராக எப்படி உள்ளது என்ற கேள்விக்கு, “இப்போது மூத்த வீரர்களாக இருப்பவர்களுடன் நான் ஏற்கனவே விளையாடியுள்ளேன். இப்போது அணியில் என்னுடைய பங்கு மாறியுள்ளது. மூத்த வீரர்கள் மட்டுமில்லாமல் அனைவருடனும் எனது உறவு மிகவும் நன்றாகவே உள்ளது” என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்திய வீரர்கள் யாருக்கும் பயப்படவில்லை, மற்றவர்களின் திறமையை நாங்கள் மதிக்கிறோம். ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் இருவரும் 5 நாட்களும் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள். டெஸ்ட் போட்டியில் இருவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது என்றும் கூறினார்.

மேலும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நல்ல ஃபார்மில் உள்ளதாகவும், பும்ரா அணியில் இடம்பெற்றுள்ளது கூடுதல் பலம் எனத் தெரிவித்தார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவில் 3 நாட்களுக்குள் டெஸ்ட் போட்டிகள் முடிந்துவிட்டால் வேகப்பந்து வீச்சாளர்களை யாரும் விமர்சிப்பதில்லை எனக் குறிப்பிட்ட கம்பீர், இந்தியாவில் இவ்வாறு நடந்தால் மட்டும் சர்ச்சை எழுவதாகக் கூறினார்.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next