'வணங்கான்' பட டிரெய்லர் வெளியீடு!

vanangaan-film-trailer-released
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-07-08 19:32:00

சென்னை,

இயக்குனர் பாலா, அருண் விஜய் நடிப்பில் 'வணங்கான்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அதைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத் தொடர்ந்து டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது.

ஒரு கையில் பெரியார் சிலை மறு கையில் விநாயகர் சிலை என பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே கவனத்தை ஈர்த்த 'வணங்கான்'படத்தின் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இதன் டிரெய்லர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த டிரெய்லரை பார்க்கும்போது செய்யாத கொலைக்காக அருண் விஜயை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். அதன்பின் அந்த கொலைப் பழியில் இருந்து தான் நிரபராதி என்பதை அருண் விஜய் எப்படி நிரூபிக்கிறார் என்பது தான் படத்தின் கதையாக இருக்கும் போல் தெரிகிறது. மேலும் இந்த டிரெய்லரின் இறுதியில் இப்படம் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ads
Recent Cinema News
Trending News
Recent News
Prev
Next